சரவணமுத்து.அ:
(வித்துவான் அ.சரவணமுத்து)

பெயர்: அ.சரவணமுத்து
பிறந்த இடம்: தாண்டவன்வெளி, மட்டக்களப்பு
(1890 – 1930)

படைப்புக்கள்:
  • மாமாங்கப் பதிகம்
  • கதிர்காமவேலன் தோத்திர மஞ்சரி – 1927
  • சனி வெண்பா – 1927

இவர் பற்றி:

  • இவருக்கு நாடகத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. சுகிர்த விலாச நாடகசபைக்கு நாடகப் பாடல்கள் எழுதியதுடன் நடித்தும் உள்ளார். பாதுகா பட்டாபிசேகம், இராமர் வனவாசம், இலங்கா தகனம் ஆகிய நாடகங்களைப் படைத்தவர் இவர். வேல்ஸ் இளவரசர் கொழும்புக்கு விஜயம் செய்திருந்த சமயம் இராமர் கதையில் இராவணனாக நடித்து பரிச பெற்றவர். இவர் ஈழத்து நித்திலக்கிழார் என்று அழைக்கப்பட்டவர். மதுரைத் தமிழ் சங்க செந்தமிழ் இதழில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.